தாமஸ் அல்வா எடிசனின்  பொன் மொழிகள்

நான் ஒருபோதும் தவறுகளைத் தோல்விகள் என்று கருதுவதில்லை,  அவை வெறுமனே வெற்றி பெறமுடியாத வழிகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளாகும்.

நான் தோல்வியடையவில்லை, வெற்றி பெறமுடியாத 10,000 வழிகளைக் கண்டுபிடித்தேன் 

தைரியமாக இருங்கள், நம்பிக்கை வைத்திருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்.

 வெற்றி என்பது கற்பனை மற்றும் லட்சியம் மற்றும் வேலை செய்வதற்கான விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

 – நீங்கள் ஒரு யோசனையை நிராகரிப்பதற்கு முன், அதைப் பற்றிக்  குறைந்தது ஐந்து நல்ல விஷயங்களைக் கண்டறியுங்கள்.

உண்மையில் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே மூலதனம் நேரம் தான், மேலும் அவன் இழந்தால் பெற முடியாத ஒரே விடயம் நேரம்.

நான் விரும்பியதை அடையும் வரை, நான் இலக்கிலிருந்து  ஒருபோதும் வெளியேறப் போவதில்லை 

ஒரு நல்ல நோக்கம், மோசமான அணுகுமுறையால், பெரும்பாலும் மோசமான முடிவுக்கு வழிவகுக்கிறது. 

தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான வழி. 

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்!