TRB Annual Planner 2025
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) சார்பில் 2025-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்வுகளின் அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன, இதில் 4 ஏற்கனவே அறிவிக்கப்பட்டவையாகவும், 5 புதிய அறிவிப்புகளாகவும் உள்ளது.
TRB Annual Planner 2025 Overview
🔹 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு:
- அறிவிப்பு: ஆகஸ்ட் 2025
- தேர்வு தேதி: நவம்பர் 2025
- காலியிடங்கள்: 1,915
🔹 பட்டதாரி ஆசிரியர் தேர்வு:
- அறிவிப்பு: செப்டம்பர் 2025
- தேர்வு தேதி: டிசம்பர் 2025
- காலியிடங்கள்: 1,205
🔹 வட்டாரக் கல்வி அலுவலர் (PEO) தேர்வு:
- அறிவிப்பு: நவம்பர் 2025
- தேர்வு தேதி: மார்ச் 2026
- காலியிடங்கள்: 51
TRB Annual Planner 2025
டெட் தேர்வு அறிவிப்பு இல்லை – எதிர்பார்ப்பு வீணாகிறது?
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த டெட் (TET) தேர்வுக்கான எந்த அறிவிப்பும் இந்த ஆண்டு அட்டவணையில் இடம்பெறவில்லை. எனவே, 2025-ஆம் ஆண்டு டெட் தேர்வு நடைபெற வாய்ப்பில்லை.
2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை
தமிழ்நாட்டில் இறுதியாக 2023-ஆம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறைகளின்படி ஆண்டுக்கு இரண்டு முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதை தொடர்ந்து CBSE பள்ளிகளுக்கான CTET தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படாமல் இருப்பது முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.
அனைத்து அறிவிப்புகளும் TRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு, TRB இணையதளத்தை பார்வையிடுங்கள்.
Also Read: 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை; அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு..!
About Me
Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.
TET.information detail