நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள டெஸ்ட் திரைப்படம் விமர்சனம்..! Test Movie Review in tamil Test Movie tamil Watch online Check Now

Test Movie Review in tamil

Test Movie Review in tamil  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன். முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சித்தார்த். இவர்கள் 3 பேரும் இணைந்து  நடித்துள்ள திரைப்படம் டெஸ்ட்.

டெஸ்ட் கிரிக்கெட், சூதாட்டம், நடுத்தர வாழ்க்கை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

Test Movie Review in Tamil
Test Movie Review in Tamil

Test Movie Review in tamil

சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் டெஸ்ட் படம் உருவாகியுள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரராக சித்தார்த் அர்ஜுன் எனும் கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். ஹைட்ரோ பெட்ரோல் கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக கஷ்டப்படும் குடும்ப வாழ்க்கையில் எப்படியாவது சாதனை செய்துவிட வேண்டும் என சரவணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடிப்பு அரக்கனாகவே மாறியுள்ளார்.

அவருடைய மனைவியாக குமுதா கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா குழந்தையை பெற்றுக் கொள்ள iVF ட்ரீட்மெண்டுக்காக தனது கணவரிடம் பணத்தை ரெடி பண்ண சொல்கிறார். மாதவன் புராஜெக்ட் மத்தியில் சான்க்‌ஷனாக 5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். சித்தார்த்துக்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்றும் அவரை விருப்ப ஓய்வு கொள்ள அணியினர் வற்புறுத்த இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச்சை வைத்து மும்பை டான் ஒருவர் பெட்டிங்கும் நடத்துகிறார்.

கிரிக்கெட் பெட்டிங் மூலம் பல கோடிகளை முதலீடு செய்து, அர்ஜூனின் கடைசி ஆட்டத்தை பணையம் வைக்க முயற்சிக்கிறது பெட்டிங் குரூப். இந்த பெட்டிங், சித்தார்த் மற்றும் மாதவனை எப்படி இணைக்கிறது? அதை சுற்றி நடக்கும் கதை தான் டெஸ்ட். மாதவன் மனைவியாக நயன்தாரா, சித்தார்த் மனைவியாக மீரா ஜாஸ்மின். கிரிக்கெட், பெட்டிங் இதெல்லாம் நாம் பார்த்து பழகிய கதை தான். அதிலிருந்து புதிதாக ஒன்றை சொல்கிறோம் என்று, தலையைச் சுற்றி மூக்கைத் தொட வைத்திருக்கிறார்கள்.

Test Movie tamil Watch online

Click here to watch Test Movie in Tamil

Also Read: வெற்றி படிக்கட்டு; அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொன் மொழிகள்..!

Test Movie Review in Tamil
Test Movie Review in Tamil

About Me

More Posts

Leave a Comment