தமிழக மின்சார வாரியத்தில் உள்ள பணிகள் – முழு தொகுப்பு..! List of Jobs TNEB 2025

List of Jobs TNEB 2025

தமிழக மின்சார வாரியத்தில் (TANGEDCO) பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் டிரான்ஸ்ஃபார் மேன்கள், உதவி இன்ஜினியர்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட்கள், டெக்னீசியன்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியிடங்களில் நியமனம் நடைபெறுகிறது. இப்பணிகளுக்கு தகுந்த தகுதி மற்றும் தேர்வு முறைகள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றனர். மின்சார வாரியத்தில் பணியாற்றுவது நிலையான அரசு வேலை வாய்ப்பாக மட்டுமல்லாது, வேலைபார்த்த இடத்தில் பாதுகாப்பும், சிறந்த ஊதியமும், பதவி உயர்வு வாய்ப்பும் உள்ளது. தமிழ்நாடு அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு எனலாம்.

குறைந்தது 50,000 த்திற்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். எனவே, மின் வாரியத்தில் பணி புரியும் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதும் இதற்காக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற முழு விவரங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

List of Jobs TNEB 2025
List of Jobs TNEB 2025

List of Jobs TNEB 2025

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம்
வேலை வகை  தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி உதவி பொறியாளர்,

கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் பல பதவிகளுக்கு

கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு,

10 ஆம் வகுப்பு

காலியிடங்கள்  50000+
பணியிடம்  தமிழ்நாடு
அறிவிப்பு தேதி Updating
விண்ணப்ப முறை ஆன்லைன்

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் என 85 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து 600 உதவி பொறியாளர், 1300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு இன்ஜினியரிங் உட்பட 2 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, இதுவரை அதற்கான தேர்வு நடத்தப்படவில்லை. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள், அதற்கான தேர்வை விரைவாக நடத்துமாறு தமிழக மின்வாரியத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி இந்த பதவிகளுக்கான மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Also Read: தமிழக அரசு வேலைவாய்ப்பு 1,299 காலிப் பணியிடங்கள் || நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!

TNEB Job Qualification கல்வித்தகுதி :

Post Name Qualification
Assistant Accounts Officer  CA
Field Assistant (Trainee)   ITI
 Junior Assistant (Accounts) B.Com
 Assistant Engineer Degree
Assessor Degree

 

சம்பள விவரங்கள்

Post Name Salary
Assistant Accounts Officer Rs. 60155 – 92965/-
Field Assistant (Trainee) Rs.18800-59900/-
 Junior Assistant (Accounts) 19500 – 62000/-
 Assistant Engineer 39800-126500/-
Assessor 19500 – 62000/-

 

தேர்வு செய்யும் முறை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள், எழுத்து தேர்வு / நேர்காணலின் அடிப்படையில் நிரப்பப்படும். தேர்வு முறை பற்றிய முழுமையான விவரங்களை, மின்சார வாரியம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடும்..

முக்கிய தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  தற்போது மின் வாரிய பணிகளுக்கான பாடத்திட்டம் , கேள்வி தாள் முறை ஆகியவற்றை தயார் செய்ய அறிவித்துள்ளது. எனவே தேர்வர்கள் இத்தேர்வு தயார் நிலையில் இருக்க வேண்டும்

தமிழ்நாடு மின்சார வாரியம் தனது வலைத்தளத்தில், மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட உடன், அதற்கான விண்ணப்ப இணைப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் இணையுங்கள்  – Click here to Join Our WhatsApp Group

About Me

Web ~  More Posts

Karthi is a highly experienced educator with 15 years of teaching expertise in engineering and technology. Holding an M.E and Ph.D., he has mentored countless students in core technical subjects. Over the past 5 years, he has been actively providing accurate and up-to-date government job alerts through his website, helping aspirants stay informed about career opportunities. His dedication to education and public service makes him a trusted source for job-related updates and insights.

1 thought on “தமிழக மின்சார வாரியத்தில் உள்ள பணிகள் – முழு தொகுப்பு..! List of Jobs TNEB 2025”

Leave a Comment