Details of TN EB Bill 2025
தமிழகத்தில் தற்போது வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளைச் சேர்ந்த மொத்தம் 3.04 கோடிக்கு மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான கட்டண நிர்ணயத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய முறையில், வீடுகளுக்கு வழங்கப்படும் முதல் 100 யூனிட்கள் இலவசம், அதற்கு மேலாக 101-வது யூனிட் முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்கள் ஒரே கட்டணத்தில் பெரிய தொகையை செலுத்த வேண்டி வருகிறது.
நல்ல கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி? || முழு விவரங்கள்..!

இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக மாதந்தோறும் மின் கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்மார்ட் மீட்டர் பெட்டிகள் உற்பத்தி செய்ய தற்போது டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 3-4 மாதங்களில் தகுதியான நிறுவனங்களுக்கு இந்த பணிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்த புதிய ஸ்மார்ட் மீட்டர் வசதியின் மூலம், மின் பயன்பாடு துல்லியமாக கணக்கிடப்படும் என்பதால், பொதுமக்களுக்கு மேலும் அதிக பணச் சேமிப்பு செய்யும் வாய்ப்பு உருவாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.